Published : 13,Feb 2023 09:39 PM

விமானத்தின் மொத்த இருக்கைகளையும் உறவினர்களுக்காக புக் செய்த மணமகன்! அசத்தல் திருமணம்

The-groom-who-took-all-his-relatives-on-the-same-plane-

நேபாளத்தில் மணமகன் ஒருவர், தன்னுடைய உறவினர்கள் அனைவரையும் விமானத்தில் அழைத்துச் சென்ற சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வசதி படைத்த பலரும் இன்று தங்களது திருமணங்களை ஆடம்பரமாய் நடத்திவருகின்றனர். அந்த வகையில் நேபாளத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர், தன் திருமணத்திற்காக தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரையும் அழைத்துச் செல்வதற்காக விமானம் ஒன்றையே புக் செய்திருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் உள்ள தி ஷுப் திருமண் (thushuphwedding) என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும், ''Day 1: Ride to get @drolia_shagun home'' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

image

அந்த வீடியோவில், மணமகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகமாய் கைககளை அசைத்துச் சத்தமிடுவதுடன் தங்கள் கைகளால் இதய வடிவங்களை காண்பித்து மகிழ்கின்றனர். இறுதியில், மணமகன் (புவன்) தன் மெஹந்தி கைகளுடன் கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார். இந்த திருமணம் நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, 17 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், 38,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

அதேநேரத்தில் இதுதொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், ''நீங்கள் பணக்காரர் என்று சொல்லாமல் சொல்லுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ''நான் உண்மையிலேயே ஆர்வமாக உள்ளேன். இப்படி செய்ய எவ்வளவு செலவாகும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

- ஜெ.பிரகாஷ்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்