
விதிமதி உல்டா படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க...’ என்ற ஒரு நிமிட சிங்கிள் டிராக் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இதில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் நடித்திருக்கிறார்கள். இதற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். கபிலன் முழு பாடல்களையும் எழுதியிருக்கிறார். இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி இயக்கியுள்ளார். இதில் டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட் ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
பாடல் டீசரை வெளியிட்டதற்காக இப்படத்தின் நாயகி ஜனனி ஐயர் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறியிருக்கிறார்.