Published : 28,Sep 2017 12:58 PM

இளம் நடிகை மீது மம்முட்டி ரசிகர்கள் வலைதள தாக்குதல்

Trolled-Over-Mammootty-Comment--Kerala-Actor-s-Tearful-Apology-On-Facebook

இளம் நடிகை அன்னா ரேஷ்மா மீது மம்முட்டி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வசைமாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் செய்வது அறியாமல் உறைந்து போய் இருக்கிறார் அன்னா.

மலையாளப்பட உலகின் இளம் நடிகை அன்னா ரேஷ்மா ராஜன். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அவரிடம் ‘யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிக இயல்பாக அவர்’  நான் துல்கருடன் ஜோடியாக நடிப்பேன். மம்முட்டி அவருக்கு அப்பாவாக நடிப்பார்’ என்று பதில் கூறினார். 

இதனால் மம்முட்டியின் வயதை அவர் கிண்டல் செய்துவிட்டார் என கோபமான அவரது ரசிகர்கள் வலைதளத்தில் அன்னாவை வசையாக திட்டி தீர்த்து வருகின்றனர். இந்தப் பிரச்னை அளவுக்கு மீறி பெரிதானதால் அதற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் அன்னா தனது ஃபேஸ்புக்கில் நேரலையில் தோன்றி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

அதில் நான் இருவருடனும் ஒரே சமயத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதற்காகதான் அப்படி ஒரு பதிலை கூறினேன். நீங்கள் விரும்புவதை போல நானும் மம்முட்டிக்கு ஜோடியாகவும் நடிக்க தயார். நான் கூறியதை ஆன்லைன் ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளன. நேற்று இது குறித்து தொலைபேசியில் மம்முட்டி என்னிடம் பேசினார். எதற்கும் அச்சப்பட தேவையில்லை. இருவரும் சேர்ந்து எதிர்காலத்தில் பணியாற்றுவோம் என்று கூறியிருக்கிறார் என்று நேரலையில் பேசியுள்ளார் அன்னா. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்