Published : 11,Feb 2023 04:15 PM

ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம்! தாத்தாவின் ஆசையை நிறைவேற்றிய பேரன்கள்

Wedding-procession-by-helicopter

மத்தியப் பிரதேசத்தில் முதியவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது பேரன்கள் ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் நடத்தினர்.

திருமண நிகழ்வுகளை பொறுத்தவரை மாப்பிள்ளை - மணப்பெண் ஊர்வலம் மிகவும் பிரசித்தி பெற்றது. கிராமங்களில் சாதாரண குடும்பங்களில் தொடங்கி மிகப்பெரிய பணக்காரர்கள் வரை அனைவரும் திருமண ஊர்வலம் நிகழ்வை தங்களது வசதிக்கேற்ப சிறப்பாக நடத்துவார்கள். கிராமங்களில் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் நடந்தே கிராமத்தின் அனைத்து தெருக்களில் மணமகன் - மணமகள் ஊர்வலம் நடத்துவார்கள். மணமக்கள் இருவருக்கும் முறைக்காரர்கள் குடைபிடித்துக் கொள்வார்கள். கொஞ்சம் வசதி இருந்தால் தற்போது காரில் நடத்துவார்கள். சிலர் குதிரைகளில் நடத்துவார்கள். யானைகளிலும் சிலர் நடத்துவார்கள். திருமண நிகழ்வுகளுக்காகவே சாரட் வண்டி இருக்கும். அதில் சிலர் நடத்துவார்கள். திருமண ஊர்வலத்தின் போது இசை கச்சேரிகளுடன் ஆட்டம் பாட்டம்  கொண்டாட்டமாக இருக்கும்.

அந்த வரிசையில் மத்திய பிரதேசத்தில் வித்தியாசமான முறையில் திருமண ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள். குரானா கிராமத்தில் வசித்து வரும் ஹேம் மண்ட்லோய் மற்றும் யாஷ் மண்ட்லோய்க்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வழக்கமாக மாப்பிள்ளை அழைப்புக்கு குதிரை, சாரட் வண்டி பயன்படுத்தப்படும் நிலையில், தங்களது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இருவரும் ஹெலிகாப்டரில் தங்களது திருமண ஊர்வலத்தை நடத்தினர். இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் நடத்துவது பாரம்பரிய விழாவாக கலந்துவிட்டதாக கூறும் இருவரும், வருங்கால சந்ததியினருக்கும் இதேபோன்று வாடகைக்கு ஹெலிகாப்டரை அமர்த்தி ஊர்வலம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.

iஇதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழே இருகும் லிங்கை கிளிக் செய்யவும். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்