Published : 07,Feb 2023 08:24 PM

‘வடக்குப்பட்டி ராமசாமி’.. படத்தில் சந்தானம் ஜோடியான மேகா ஆகாஷ்!

Megha-Akash-roped-in-to-play-a-doctor-in-Santhanam-s-Vadakkupatti-Ramasamy

சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற நகைச்சுவை திரைப்படத்தில், கதாநாயகியாக இணைந்துள்ளார் நடிகை மேகா ஆகாஷ்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கிய சந்தானம், கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘அறை எண் 305-ல் கடவுள்’ என்றப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சிலப் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தாலும், கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயதம்’ என்றப் படத்திற்குப் பிறகு கதாநாயகனாகவே நடித்து வருகிறார் சந்தானம்.

கடந்த ஆண்டு வெளியான ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை அடுத்து, பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜின் இயக்கத்தில் ‘கிக்’ என்றப் படத்தில் நடித்துள்ள சந்தானம், அடுத்ததாக ‘டிக்கிலோனோ’ படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் இணைந்து ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

image

1960 காலக்கட்டத்தில் நடக்கும் பீரியட் காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாக உள்ளது. இந்நிலையில், ரஜினியின் ‘பேட்ட’, சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ உள்ளிட்டப் படங்களில் நடித்த மேகா ஆகாஷ், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கதைக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்பதால், கதாநாயகியை தேர்ந்தெடுப்பதில் தாமதம் நிலவி வந்ததாகவும், கடைசியில் மேகா ஆகாஷ் இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என அவரை தேர்ந்தெடுத்ததாகவும் இயக்குநர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் மருத்துவராக மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிழல்கள் ரவி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், ராஜேந்திரன் உட்பட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்