Published : 07,Feb 2023 05:55 PM

”விரைவில்”.. விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ குறித்து புதிய போஸ்டருடன் அப்டேட் வெளியீடு!

Dhruva-Natchathiram-Makers-announce-an-exciting-update-of-Vikram-s-long-pending-film-with-Gautham-Menon

விக்ரம் நடிப்பில் உருவாகி நீண்டநாள் கிடப்பில் உள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கெளதம் மேனன் - விக்ரம் கூட்டணியில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்த நிலையில், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. அதன்பிறகு, மீண்டும் சில காலம் துவங்கிய படப்பிடிப்பு நடந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மறுபடியும் டீசர் வெளியானது. இதனால் விரைவில் படம் வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து படம் கிடப்பில் போடப்பட்டது. பல நாடுகளில் படப்பிடிப்பு நடந்த நிலையில், இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார்.

பேட்ச் ஒர்க்கெல்லாம் முடிந்ததாக கூறப்பட்ட நிலையில், இறுதிக்கட்டத்தில் என்ற கேப்ஷனுடன் ‘துருவ நட்சத்திரம்’ படம் விரைவில் வெளிவர உள்ளதாக புதிய போஸ்டருடன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம், ஜான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம், இன்னும் 10 படமாக (Spy Universe) எடுக்குமளவுக்கு கதைக்களம் கொண்டதும் என்றும், கண்டிப்பாக இரண்டாவது பாகம் வெளிவரும் வகையில், லீட் கொடுக்கப் பட்டிருப்பதாகவும் அண்மையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் விக்ரமுடன், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்ஷினி, விநாயகன், ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். அடுத்தமாதம் அல்லது மே மாதத்தில் இந்தப் படம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்