[X] Close

டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்: வேகமாக ரன் சேர்ப்பு

Australia-won-the-toss-elected-to-bat

பெங்களூவில் நடைபெறும் இந்திய அணியுடனான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வேகமாக ரன்கள் சேர்த்து வருகிறது.


Advertisement

பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரன் பின்ச்-சுடன் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 100-வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய பெருமையை பெற்றார். 10 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மேத்யு வேட் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் காயத்தால் விலகியுள்ள ஆஷ்டன் ஏகருக்கு பதிலாக ஆடம் ஸம்பா களமிறங்குகிறார். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் ஆகியோருக்கு பதிலாக உமேஷ் யாதவ், முஹமது ஷமி, அக்ஷர் படேல் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close