முக்கிய விவாதங்கள்- இன்று நடைபெறும் பாஜகவின் நாடாளுமன்றக் கூட்டம்

முக்கிய விவாதங்கள்- இன்று நடைபெறும் பாஜகவின் நாடாளுமன்றக் கூட்டம்
முக்கிய விவாதங்கள்- இன்று நடைபெறும் பாஜகவின் நாடாளுமன்றக் கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் கட்சியின் கூட்டம் இன்று நடைபெறுகிறது

நாடாளுமன்றத்தில் பாஜகவின் வாராந்திர கூட்டம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அவை செயல்படும் போது நடைபெறுவது வழக்கம் .அந்த வகையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் , சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2023-24 உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்த விவாதம் இந்தக் கூட்டத்தில் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி , பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா , மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் ,அஸ்வினி வைஷ்ணவ், பகவத் கார்ல்,எஸ் ஜெய்சங்கர் மற்றும் முரளிதரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு .அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது

அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரை மற்றும் வேறு விவகாரங்கள் மீதான விவாதங்களும் நடத்தப்படாமல் , அவைகள் முடங்கியுள்ளன. இன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டமும் கார்கே தலைமையில் காலை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com