Published : 06,Feb 2023 06:43 PM

ராஜஸ்தானில் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு; ரஜினியை கண்டதும் குஷியில் காரை முற்றுகையிட்ட ரசிகர்கள்

Rajinikanth-s-car-mobbed-by-fans-in-Jaisalmer-as-he-shoots-for-Jailer-Watch

‘ஜெயிலர்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குகழுவினர் ராஜஸ்தான் சென்றுள்ள நிலையில், அங்கு நடிகர் ரஜினிகாந்த் சென்ற காரை ரசிகர்கள் கூட்டம் முற்றுகையிட்டு செல்ஃபி எடுக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் - நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. ரஜினியின் 169-வது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சிவராஜ் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.

சென்னை, எண்ணூர், கடலூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், தற்போது படக்குழுவினர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். தங்க நகரம் என்று அழைக்கப்படும் இங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஜெய்சல்மர் கோட்டையின் வெளிப்புறம் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது.

image

அங்கு ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரசிகர்கள் கூட்டம், அந்த இடத்திற்கு வெளியே காத்துக்கொண்டிருந்தபோது காரில் வந்த ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். உடனே செல்ஃபி எடுக்கவும், ரஜினியை காரில் இருந்து வெளியே வருமாறும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். எனினும், காரை விட்டு இறங்காத நடிகர் ரஜினிகாந்த், காரின் கண்ணாடி கதவுகளை மட்டும் சிறிது இறக்கி, ரசிகர்களைப் பார்த்து கையசைத்துச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்