Published : 06,Feb 2023 10:04 AM

ஓசூர் அருகே நடமாடும் ஒற்றை காட்டு யானை - அச்சத்தில் பொது மக்கள்

A-single-wild-elephant-roaming-near-Hosur-people-in-fear

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் பகுதியில் இன்று அதிகாலை ஒற்றை காட்டு யானை நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக சானமாவு, தேன்கனிக்கோட்டை, நாகமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவைகள் வனப்பகுதிகளில் இருந்து கிராமப் பகுதிக்குள் புகுந்து விடாதவாறு வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

image

இந்நிலையில், நேற்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தில் ஒற்றை யானை நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து வனத் துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதுடன் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் யானை நடமாடும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்து வருகின்றனர். இந்த ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் வேண்டும் என பொதுமக்கள்; கோரிக்கை விடுத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்