திருப்பூர்: அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

திருப்பூர்: அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி
திருப்பூர்: அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்  3 பேர் பலி

திருப்பூர் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

கோவையிலிருந்து கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து திருப்பூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது கரூரில் இருந்து திருப்பூரைச் சேர்ந்த லோகேஸ்வரன் என்பவர் தனக்குச் சொந்தமான ஆம்னி காரில் குடும்பத்துடன் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக அரசு பேருந்தும் ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் ஆம்னி கார் முழுவதும் சேதமடைந்த நிலையில், ஆம்னி காரில் பயணித்த லோகேஸ்வரன், பிரமிளா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தேவி என்பவர் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூன்று பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த வெள்ளகோவில் போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com