Published : 06,Feb 2023 08:37 AM
அதிபயங்கர நிலநடுக்கம் - துருக்கியில் பல கட்டடங்கள் தரைமட்டம்: வெளியாகாத பலி எண்ணிக்கை!

துருக்கி நாட்டில் இன்று அதிகாலை காசியானதெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் பதிவான அதிபயங்கர நில நடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் சேதமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கும் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் கூறியுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீடுகள் பலத்த சேதமடைந்தாக கூறப்படுகிறது.
BREAKING: First casualties reported after massive M7.8 earthquake in central Turkey. Governor of Osmaniye
— Global News Network (@GlobalNews77) February 6, 2023
says at least 5 people have been confirmed dead and over 34 collapsed buildings. #Turkey#Earthquake
pic.twitter.com/s8rrRwWN7d
இந்த நிலநடுக்கத்தில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.பயங்கர நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் லெபனான், சிரியா, ஸைப்ரஸ், இஸ்ரேல் உள்பட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் அடிக்கடி நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்துவது அந்நாட்டு மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
கடந்த காலங்களில் 1999 ஆம் ஆண்டு துருக்கியில் 7.4 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,000 பேர் பலியாகினர். இதில் தலைநகர் இஸ்தான்புல்லில் மட்டும் 1000 பேர் உயிரிழந்தனர். இதேபோல 2020 ஜனவரி மாதம் 6.8 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டு அக்டோபரில் ரிக்டர் அளவில் 7.0 அளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 114 பேர் பலியாகினர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.