Published : 06,Feb 2023 08:13 AM

சேலம்: முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிக் கொலை – போலீசார் தீவிர விசாரணை

Salem-A-famous-rowdy-was-hacked-to-death-due-to-enmity-police-are-investigating

சேலம் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்த் (44). இவர் தனது மனைவி சத்யா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வலசையூர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் பிரபாகரன் என்பவருடன் காட்டூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற ஆனந்த், 11 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்டதாகவும், காட்டூர் மயானம் அருகே ஆனந்த் வந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து ஆனந்த் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு காரில் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

image

இந்நிலையில், அந்த கும்பல் தாக்கியதில் ஆனந்துடன் வந்த பிரபாகரன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து கொலை செய்யப்பட்ட ஆனந்த் மீது கொலை, வழிபறி, ஆட்கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதைத் தொடர்ந்து முன்விரோதம் காரணதாக ஆனந்த் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனந்த் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்