Published : 28,Sep 2017 06:04 AM

விடுதியில் தகராறு செய்த பென் ஸ்டோக்ஸ் இங்கி. அணியில் மீண்டும் சேர்ப்பு

Ben-Stokes--who-was-in-dispute-at-the-hotel--Rejoin-the-team

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் அனுபவ வீரர் பென் ஸ்டோக்ஸ் உட்பட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுள்ளது.

இரவு விடுதியில் தகராறு செய்த பிரச்னை காரணமாக பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ‌நான்காவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் பென் ஸ்டோக்ஸ் மட்டும் ஆஷஸ் தொடருக்கான அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜோ ரூட் தலைமையிலான 16 பேர் கொண்ட அணியில் குக், மொயின் அலி, பையர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், ஸ்டுவார்ட் பிராட், ஆண்டர்சன், கேரி பேலன்ஸ் ஆகிய அனுபவ வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஜேக் பால், மார்க் ஸ்டோன்மேன், டேவிட் மாலன், மேசன் கிரேன், பென் ஃபோக்ஸ், கிரய்க் ஓவர்டன் ஆகிய இளம் வீரர்களுக்கும் இங்கிலாந்து அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்