Published : 03,Feb 2023 04:24 PM
LCU-வில் குருதிப்புனல் நுழைகிறதா? - பல விஷயங்கள் ஒத்துப்போகுதே!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படம் சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில், படத்தின் டைட்டில் ‘குருதிப்புனல்’ ஆக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜின் ‘தளபதி 67’ படத்தில், விஜய்யுடன், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப் படம் குறித்து வெளியாகும் தகவலும், படக்குழு அறிவிக்கும் தகவலும் ஏறக்குறைய இதுவரை ஒத்துப்போகின்றன. அந்த வகையில், படத்தின் டைட்டில் ‘குருதிப்புனல்’ ஆக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில், கடந்த 1995-ம் ஆண்டு பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான ‘குருதிப்புனல்’ படத்தில் கமல்ஹாசனின் நண்பராகவும், அவருடன் பணியாற்றும் காவல்துறை அதிகாரியாகவும் அர்ஜூன் நடித்திருந்தார். தற்போது ‘தளபதி 67’ படத்திலும் அர்ஜூன் நடிப்பதால் ‘குருதிப்புனல்’ படத்தின் பெயர் வைப்பதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ், ‘தளபதி 67’ முழுக்க முழுக்க தன்னுடையப் படம் என்று கூறியிருந்த நிலையில், முன்பு ஒருமுறை ‘குருதிப்புனல்’ படத்தை திரும்பி எடுக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்திருந்தார். அந்தப் படத்தில் “நான் செத்தா, விழுற விதையில் ஆயிரம் பத்ரி முளைப்பார்கள்’ என்று தீவிரவாதிகளின் தலைவனாக பத்ரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நாசர் கூறியிருப்பார்.
#Thalapathy67 as ?????
— OTVF™ (@otvfofficial) February 3, 2023
Previous interview of #LokeshKanakaraj where he tells it's tough to do a film like kuruthiPunal once again, but I wish to do that #ThalapathyVijay#Thalapathy67Update#Thalapathy67Cast#Thalapathy67TitleRevealpic.twitter.com/Ri6YjbxYQU
இதனாலும், ‘விக்ரம்’ படத்தின் கனெக்டிட்விட்டி இல்லாமல், ‘தளபதி 67’ படம் மூலம் ‘குருதிப்புனல்’ என்ற புதிய யுனிவர்ஸை லோகேஷ் கனகராஜ் உருவாக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரத்தம் தெறிக்க வரையப்பட்ட விஜய் படத்தை தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூகவலைத்தளப்பக்கங்களில் பதிவிட்டுள்ளதாலும் ‘குருதிப்புனல்’ என்ற டைட்டில் தான் அறிவிக்கப்போகிறார்கள் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் கடந்த முறை ‘விக்ரம்’ படத்தில் தொழில்நுட்ப ரீதியாக கைக்கொடுக்காத நிலையில், டீ ஏஜிங் டெக்னாலஜி இந்தப் படத்தில் பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.
KURUTHI?
— Rohini SilverScreens (@RohiniSilverScr) February 3, 2023
Waiting laye veri aagudhe #Thalapathy67#Thalapathy67TitleRevealpic.twitter.com/5UdXABCwNX