Published : 03,Feb 2023 08:14 AM

'ஸ்லெட்ஜிங் செய்த விராட் கோலி; தடுத்த தோனி '- பழசை கிளறிய பாகிஸ்தான் வீரர்

Pakistan-Pacer-Claims-MS-Dhoni-Had-Told-Virat-Kohli-To-Back-Off-After-Sledging-Attempt-In-World-Cup

2015 உலகக் கோப்பை போட்டியின் போது விராட் கோலி தன்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயன்றதாகவும், தோனி அவரை தடுத்ததாகவும் கூறி உள்ளார் சோஹைல் கான்.  

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராஜாங்க ரீதியாக நல்லுறவு இல்லாததால், இரு நாடுகள் மோதும் கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். இருநாட்டு வீரர்களும் வெற்றிக்காக வெறித்தனமாக போராடுவார்கள். இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். வெல்லும் அணி உள்நாட்டில் கொண்டாடப்படுவதும், ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதும் வழக்கம். அதே நேரம் தோற்ற அணி கடுமையான விமர்சனத்துக்கு இலக்காகும்.

2012ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடவேயில்லை. உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடிவருகின்றன. இந்தநிலையில் 2015 உலகக் கோப்பை போட்டியின் போது விராட் கோலி தன்னை ஸ்லெட்ஜிங் செய்ய  முயன்றது குறித்து தற்போது பேசியிருக்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் கான்.

image

பாகிஸ்தான் அணிக்காக 9 டெஸ்ட், 12 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சோஹைல் கான், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சோஹைல் கான், 2015ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது விராட் கோலி தன்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயன்றதாகவும், தோனி அவரை தடுத்ததாகவும் கூறி உள்ளார்.

அந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் சோஹைல். 7 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் இந்திய அணி சேர்த்த நிலையில், இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 224 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

image

அந்த போட்டியின் போது விராட் கோலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை விவரித்த சோஹைல் கான், "நான் பேட் செய்ய நின்றிருந்த போது, விராட் கோலி என்னிடம் வந்து 'இப்போதுதான் வந்துள்ளீர்கள், நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்களே' என்று சீண்டினார். அதற்கு நான் பதிலடியாக, ''மகனே, நீ இந்தியாவுக்காக அண்டர்-19 விளையாடும் போது, நான் ஒரு டெஸ்ட் வீரர்' என்றேன். அப்போது மிஸ்பா என்னை அமைதியாக இருக்கும்படி சொன்னார். அதேபோல், எம்எஸ் தோனி கோலியிடம், ''விட்டுவிடுங்கள். அவர் (சோஹைல் கான்) அனுபவம் வாய்ந்தவர். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாது" என்று கூறியதாக சோஹைல் கான் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்