Published : 02,Feb 2023 08:15 AM

மதுரை: இந்து மக்கள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் தலைமைக் காவலர் உட்பட 6 பேர் கைது

Madurai-6-people-including-head-constable-arrested-in-case-of-murder-of-Hindu-People--Party-leader

மதுரையில் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காததால் தலைமைக் காவலர் ஒருவரே கூலிப்படையை ஏவி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலையழகுபுரம் 1-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். நகை கடையை நடத்திவரும் இவர், இந்து மக்கள் கட்சியின் தென்மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் சோலையழகுபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.

image

இதில் படுகாயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய குற்றப்பிரிவு தலைமைக் காவலர் ஹரிஹரன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

image

இதில் நகை தொழிலுக்காக கொடுத்த கடனை திருப்பி தராமல் மணிகண்டன் ஏமாற்றி வந்ததாகவும், மற்றும் காவலர் ஹரிஹரனின் மனைவியுடன் மணிகண்டன் நட்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன் கோர்ட்டில் பணிக்கு செல்லும் போது பழக்கமான அபுதாகீர், பல்லு கார்த்திக் அய்யப்பன், இருட்டுமணி, அழகுபாண்டி ஆகியோர் மூலம் மணிகண்டனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவலர் ஹரிஹரன் மற்றும் 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்