'தோனி ஒரு சுயநலமற்ற வீரர்' - முன்னாள் ஜாம்பவான்கள் சர்ட்டிஃபிகேட்

'தோனி ஒரு சுயநலமற்ற வீரர்' - முன்னாள் ஜாம்பவான்கள் சர்ட்டிஃபிகேட்
'தோனி ஒரு சுயநலமற்ற வீரர்' - முன்னாள் ஜாம்பவான்கள் சர்ட்டிஃபிகேட்

'ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சுயநலமற்ற வீரர் என்றால் அது தோனி தான்' என்று அணில் கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளனர்.

16வது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரலில் தொடங்குகிறது. இதுவரை 4 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. எம்.எஸ். தோனியின் தலைமையிலேயே இம்முறையும் சி.எஸ்.கே அணி களமிறங்குவதால் அவரது தலைமையில் இந்த தொடரை வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் கடந்த 2020-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

தற்போது 41 வயதான தோனி இந்த சீசனுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தகவல்கள் வருகிறது. ஆகையால், சிஎஸ்கே அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துவிட்டு விடைபெறுவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகம் மத்தியில் அதிகமாகவே உள்ளது. எனவே இந்த தொடரை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பதற்காக தோனி தற்போதே தீவிர பயிற்சியை துவங்கியுள்ளார். அதுகுறித்த சில வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் 'தோனி ஒரு சுயநலமற்ற வீரர்' என்று அணில் கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெய்ல் ஆகியோர் கூறியுள்ளனர். ஜியோ சினிமா நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ''ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சுயநலமற்ற வீரராக எம்எஸ் தோனியை தான் கருதுகிறேன். கேப்டன் பதவிக்காக பலர் ஆசைப்படும் நிலையில், தோனி அப்பதவியை விட்டுக்கொடுத்தது விலகினார். அவ்வாறு விலகுவது எளிதல்ல. ஹேட்ஸ் ஆஃப். அவர் எவ்வளவு சுயநலமற்றவர் என்பதை இது காட்டுகிறது'' என கூறினார்.

மேலும் பல முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களும் மிகவும் தன்னலமற்ற வீரராக தோனியை தேர்வு செய்துள்ளனர். சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெய்ல், ஆர்பி சிங், அனில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா, ஸ்காட் ஸ்டைரிஸ் மற்றும் பலரும் மிகவும் தன்னலமற்ற வீரர் யார் என கேட்கப்பட்ட கேள்விக்கு, அனைவரும் தங்கள் விருப்பமான பெயராக எம்எஸ் தோனியை தேர்ந்தெடுத்துள்ளனர். அதேபோல் ஐபிஎல்லில் மிகவும் ஸ்டைலான வீரர் யார் என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கையில் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com