Published : 27,Sep 2017 02:35 PM
சூரியனை ஆராய 2500 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைத் தாங்கும் புதியவிண்கலம்

சூரியனின் வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விண்கலத்தை விரைவில் விண்ணில் செலுத்தவுள்ளனர்.
சூரியனின் மேற்பரப்பை விட அதன் வளிமண்டலம் அதிக வெப்பத்துடன் இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை விடை காணமுடியவில்லை. அதை தெரிந்து கொள்வதற்காக நாசா விஞ்ஞானிகள் 2 ஆயிரத்து 500 ஃபாரன்ஹீட் வெப்பத்தை தாங்கக் கூடிய அளவுக்கு அதி நவீன விண்கலத்தை தயாரித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜூலையில் விண்ணில் ஏவப்படும் இந்த விண்கலம் 2024 ஆம் ஆண்டு சூரியனை நெருங்கி ஆய்வு முடிவுகளை பூமிக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
சூரியனிலிருந்து 89 மில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து இந்த விண்கலத்தால் எடுத்து அனுப்பப்படும் புகைப்படங்கள், சூரியனின் மேற்பரப்பை விட அதன் வளிமண்டலம் அதிக வெப்பத்துடன் இருப்பது ஏன்? என்பதை கண்டறிய ஆய்வாளர்களுக்கு உதவும்.