`சுகங்களை அனுபவித்த சிலர், சுயநலத்துக்காக அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள்”- கேபி.முனுசாமி

`சுகங்களை அனுபவித்த சிலர், சுயநலத்துக்காக அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள்”- கேபி.முனுசாமி
`சுகங்களை அனுபவித்த சிலர், சுயநலத்துக்காக அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள்”- கேபி.முனுசாமி

“அதிமுகவில் பல்வேறு சுகங்களை பெற்றவர்கள் தற்போது சுயநலத்திற்காக இயக்கத்தை அழிக்க நினைக்கின்றனர்” என அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி குற்றம் சாட்டினார்.

ஈரோடு காரைவாய்க்காலில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி.அன்பழகன் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன், “எம்.ஜி.ஆர் தனிகட்சி ஆரம்பித்தபோது தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் திண்டுக்கல் தேர்தலில் வெற்றி பெற்றார். பல்லேறு வழியில் நம் இயக்கத்தை அழிக்க வேண்டும் என நமது இயக்கதில் பல்வேறு பதவியை வகித்தவர்கள் வேலை செய்கின்றனர். தொண்டர்கள் முழு ஒத்துழைப்பை கொடுத்து எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “தமிழ்நாட்டில் வரலாற்றில் முக்கியமான தேர்தல் இது. அதிமுகவில் பல்வேறு சுகங்களை பெற்றவர்கள் தனது சுயநலத்திற்காக இயக்கத்தை அழிக்க நினைக்கிறார்கள். மக்களுக்கு அதிமுக தொந்தரவு அளிக்கவில்லை. தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்தால் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும்” என கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com