Published : 29,Jan 2023 06:53 PM

”உலகிலேயே கிருஷ்ணரும் ஹனுமனும்தான் சிறந்த ராஜதந்திரிகள்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

MEA-Dr-S-Jaishankar-on-India---s-strategic-stand-on-Pakistan

உலகிலேயே கிருஷ்ணரும் அனுமானும்தான் சிறந்த ராஜதந்திரிகள் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புனேவில் நடந்த தனது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

The India Way: Strategies for an Uncertain World என்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய புத்தகத்தின் மராத்தி பதிப்பான பாரத் மார்க் புத்தக வெளியீட்டு விழா புனேவில் நடைபெற்றது. அதனை மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெளியிட்டார்.

அப்போது பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “உலகின் சிறந்த ராஜ தந்திரிகளே கிருஷ்ணரும் அனுமானும்தான். இதை மிகத் தீவிரமாகவே சொல்கிறேன். அனுமான் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை முன்னெடுத்துச் சென்று சீதா தேவியை தொடர்புகொண்டு இலங்கையை எரித்தார். அவர் ஒரு பல்நோக்கு ராஜதந்திரி ஆவார்.

image

மகாபாரதத்தின் இதிகாசத்திலிருந்து ஒவ்வொரு கருத்துக்கும் சமமான கருத்தை சர்வதேச உறவுகள் தொடர்பான உலகின் 10 பெரிய மூலோபாயக் கருத்துக்களுக்கு, வழங்க முடியும். தற்போதைய காலகட்டத்தில் பலதுருவ உலகம் இயங்குகிறதென்றால் மகாபாரத காலத்தில் குருஷேத்திரத்தில் நடந்ததும் பலதுருவ பாரதம்தான்.

அப்போது வெவ்வேறு ராஜ்ஜியங்கள் இருந்தன. பலராமர் நீங்கலாக யார் பக்கம் இருக்கலாம் என்ற கூட்டணி கருத்துகளும் இருந்தன. ஆனால் உலகமயமாக்கப்பட்ட உலகத்தில் ஒருவருக்கு ஒருவர் சார்ந்தும் கட்டுப்பட்டும் இருக்க வேண்டும் என மக்கள் கூறுகிறார்கள்.

ஆனால் மகாபாரத போரின் போது அர்ஜுனனின் இக்கட்டான நிலை என்னவென்றால், அவன் உணர்வு ரீதியாக ஒன்றுக்கொன்று சார்ந்திருந்தான். அதாவது என் உறவினர்களுக்கு எதிராக நான் எப்படிப் போரிடுவது என்ற மனநிலையில் இருந்தான். அதற்கு ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதாக ஆகாது, ஆனால் அது உணர்வுபூர்வமான சார்பு.

latest tamil news

பாகிஸ்தான் இதைச் செய்தது அல்லது அதைச் செய்தது என்று நாங்கள் சில நேரங்களில் கூறுகிறோம். இதுதான் போர்த்திறன்மிக்க பொறுமை. அதாவது, எப்படி கடவுள் கிருஷ்ணன் சிசுபாலனை 99 முறை மன்னித்து 100வது முறையாக அவரை கொன்றாரோ அதுபோலதான். இதுதான், ஒரு நல்ல முடிவெடுப்பவரின் மிக முக்கியமான குணங்களின் முக்கியத்துவத்தை நிரூபிப்பதாகும்.

அதேபோல, கர்ணன் மற்றும் துரியோதனனின் நட்பு அவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தினருக்கோ எந்த பலனையும் அளிக்கவில்லை. இதனால் சமூகத்தில் எந்த நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அது அவர்களின் உயிர்களை விழுங்கி அழிவையும், மீளமுடியாத சேதத்தையும், அவர்களது குடும்பத்தாருக்கும் பரிதாபகரமான துன்பத்தையுமே கொடுத்தது.

image

ஏனெனில் விதிகளின் அடிப்படையிலான உத்தரவுகளை துரியோதனனும், கர்ணனும் மதிக்காததால் வந்த விளைவே இது. எப்படி பாண்டவர்களால் அவர்களது உறவினர்களை தேர்வு செய்ய முடியவில்லையோ அப்படியே நம்மால் அண்டை நாடுகளை தேர்வு செய்ய முடியாது.” இவ்வாறு அணுசக்திகளை வைத்திருக்கும் பாகிஸ்தான் நம்மை தாக்குமா? என்ற கேள்விக்கும், சீனாவுடனான பாகிஸ்தானின் உறவு குறித்தும் மறைமுகமாக ஜெய்சங்கர் விமர்சித்தும் பதிலளித்திருக்கிறார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்