Published : 29,Jan 2023 03:31 PM

வனத்துறையினருக்கு வந்த ரகசிய தகவல்.. ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்!

Thoothukudi-Seized-sea-cards-smuggled-in-a-vehicle-forest-guards-in-action

தூத்துக்குடி வன பாதுகாப்பு படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 170 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மன்னார் வளைகுடா வன பாதுகாப்பு படை ராமநாதபுரத்தை சேர்ந்த உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாதா கோவில் பகுதியில் ராமநாதபுரம் வன அலுவலர் நந்தகுமார் மற்றும் வன பாதுகாவலர் ஜவகர் உள்ளிட்டோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

image

அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில், தடை செய்யப்பட்ட 170 கிலோ கடல் அட்டை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடல் அட்டை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை வன பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்

இதையடுத்து கடல் அட்டையை கடத்தியது தொடர்பாக தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து ஜாகிர் உசேனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்