Published : 28,Jan 2023 09:52 PM

நிலத்தை அபகரிக்க விஷ ஊசி செலுத்தி கணவனை கொல்ல முயன்ற மனைவி? போலீசார் தீவிர விசாரணை

Did-the-wife-try-to-usurp-the-land-by-injecting-her-husband-with-poison-Police-investigation

நிலத்தை அபகரிக்கப்பதற்காக விஷஊசி செலுத்தி கணவனை கொல்ல முயன்றதாக பெண்ணொருவரை கைது செய்ய திருப்பூர் மாவட்ட காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (48). விவசாயியான இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இவருக்கு நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் சுப்பிரமணியின் தாயாருக்கும், தேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சுப்பிரமணியின் தாயார் அவரது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து தேவி, தனது கணவர் சுப்பிரமணியிடம் அவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை `விற்றுவிடுங்கள். நாம் திண்டுக்கல்லுக்கு சென்று வசிக்கலாம்’ என கூறியுள்ளார்.

image

ஆனால், இதற்கு சுப்பிரமணி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த பொங்கலன்று சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அங்கு அவருக்கு, தேவி ஊசி ஒன்றை அவருக்கு செலுத்தியுள்ளார். அந்த ஊசியை செலுத்தியதும் சிறிது நேரத்தில் சுப்பிரமணி மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள், ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கும் அவர் சுய நிலைவை இழந்து காணப்பட்டிருக்கிறார். இதையடுத்து திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சுய நினைவு திரும்பியிருக்கிறது.

இந்நிலையில் சுப்பிரமணிக்கு சுயநினைவு திரும்பாத வரை அவரது அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்ட மனைவி தேவி, சுய நினைவு திரும்பியதும் மருத்துவமனையில் இருந்து சென்றுவிட்டார் என சொல்லப்படுகிறது. இதையடுத்து சுப்பிரமணியின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்படவே இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேவி எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

image

தேவி தனது கணவருக்கு எதற்காக ஊசி செலுத்தினார், அது விஷ மருந்தா, நிலத்தை அபகரிக்க விஷ ஊசி செலுத்தி கணவரை கொல்ல முயன்றாரா அல்லது வேறு எதும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்