Published : 27,Sep 2017 01:12 PM

செந்தில் பாலாஜியை கைது செய்ய அக்.3வரை தடை

High-court-Order-On-Senthil-Balaji-Issue


முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்ய அக்டோபர் 3ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது அவரது பெயரை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாகக் கூறி பிரபு, சகாயராஜ் ஆகியோர் 16பேரிடம் 95லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த 16 பேரிடமும் இருந்து பிரபு, சகாயராஜ்க்கு பணத்தை பெற்றுக் கொடுத்த கணேஷ்குமார் என்பவர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். 
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது செந்தில்பாலாஜி தரப்பு வாதம் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதில் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளதால், செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டனர். ஆனால் முன் ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அக்டோபர் 3ம் தேதி வரை செந்தில்பாலாஜியை கைது செய்ய தடை விதித்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதில் அளிக்கவும் அறிவுறுத்தினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்