கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்: குளித்தலை அருகே சோகம்

கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்: குளித்தலை அருகே சோகம்
கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்: குளித்தலை அருகே சோகம்

கிருஷ்ணராயபுரம் அருகே பாழடைந்த பழைய கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்ற இளைஞரும், கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவக்குளம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் ராஜா என்ற இளைஞர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, பயன்படுத்தப்படாத பாழடைந்த கிணற்றில் மேய்த்துக் கொண்டிருந்த ஆடு ஒன்று தவறி விழுந்ததால் ஆட்டுக்குட்டியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் காப்பாற்றும் முயற்சியில் கிணற்றில் தவறி விழுந்த ராஜா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் தகவல் அறிந்த பொதுமக்கள் முசிறி தீயணைப்பு துறையிணருக்கு தகவல் தெரிவித்தனர்.

முசிறி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கிய ராஜாவை இறந்த நிலையில் சடலமாக மீட்டு, சடலத்தை மாயனூர் போலீசார் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com