Published : 28,Jan 2023 12:57 PM
”பெயரை தப்பா சொன்னா போதும்” - லண்டன் பெண்ணின் நூதன சேமிப்பும் பின்னணியும்!

பெயரை தவறாக உச்சரிப்பதோ, தவறாக கூப்பிடுவதையோ பெரும்பாலும் எவருமே விரும்ப மாட்டார்கள். பலருக்கு இப்படி தங்களது பெயரை தவறாக கூப்பிடுவோர் மீது கடுகடுக்கவும் செய்வார்கள். அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜூலியா க்ரீன் என்ற 28 வயது பெண் ஒருவரும் இதேபோல தனது பெயரை தவறாக உச்சரிப்பவர்களால் ரொம்பவே கடுப்பாகியிருக்கிறார்.
ஆனால் அப்படி கடுப்பாவதால் மட்டும் எந்த பயனும் இல்லை என யோசித்து எப்போதெல்லாம் தன்னுடைய பெயரை தவறாக சொல்கிறார்களோ அப்போதெல்லாம் 1 பவுண்ட் காசை உண்டியலில் போடுவதாக முடிவெடுத்திருக்கிறார் ஜூலியா.
இதற்காக ஜூலி பாட் என்ற ஒன்றை உருவாக்கிய அந்த பெண், இது வரையில் 9 பவுண்ட்டை சேமித்திருக்கிறார். இந்த ஆண்டு முடிவதற்குள் 1000 (1,00,923 ரூபாய்) பவுண்ட் சேர்த்திட வேண்டும் என இலக்காகவும் கொண்டிருக்கிறார் ஜூலியா க்ரீன். (1 பவுண்ட் - 100.92 ரூபாய்).
I’ve made a @monzo pot - £1 in for every time someone calls me Julie instead of Julia on any email/correspondence and this is just since Tuesday pic.twitter.com/jH13GMXsGp
— Julia (@jesg212) January 27, 2023
இந்த சேமிப்பு பணத்தை வைத்து வீடு வாங்கவும் ஜூலியா திட்டமிட்டிருப்பதாக மிரர் செய்தி தளத்திடம் கூறியிருக்கிறார். மேலும், “இதனை ஒரு வேடிக்கையாகத்தான் செய்து வருகிறேன். உண்மையில் என் பெயரை தவறாக கூப்பிடுவதை பற்றியெல்லாம் எனக்கு கவலை அளிக்கவில்லை. அடிக்கடி இப்படி நடப்பதால் எனக்கு சிரிப்பே வருகிறது.
ஆனால் ஜூலியா பொதுவான பெயராகவே இருக்கிறது. இருப்பினும் மக்கள் தவறாகவே கூப்பிடுவார்கள். இருப்பினும் பணம் சேமிப்பதற்கான வேடிக்கையான வழிதான் இது.” என ஜூலியா கூறியிருக்கிறார்.