Published : 27,Jan 2023 01:24 PM

ஹரீஷ் கல்யாண் - இவானாவின் Let's Get Married! ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தோனி!

Harish-Kalyan-and-Ivana-joins-hand-for-new-movie-LGM-under-MS-Dhoni-s-production-house

கிரிக்கெட் என்றாலே தமிழ்நாட்டு இளைஞர்கள் சொல்லும் ஒரே வார்த்தை `தல தோனி’. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தோனி. இவரின் வாழ்க்கை வரலாற்றை M.S.தோனி என படமாக எடுத்து, பல மொழிகளில் டப் செய்திருந்தனர் இயக்குநர்கள். அந்தப் படம், வெற்றி நடை போட்டது. தோனிக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ பத்மவிபூஷன் விருது மட்டும் அல்லாது பல உயர்ந்த விருதையும் பெற்றவர்.

இந்நிலையில் கிரிக்கெட் மட்டுமின்றி ஏராளமான துறைகளில் இவர் முதலீடு செய்து வருகிறார் தோனி. அந்தவகையில் விவசாயம் செய்வது, பள்ளிக் கூடங்கள் கட்டுவது, ஸ்டார்ட்டப் நிறுவனங்களில் முதலீடு செய்வது, விளம்பரப் படங்களில் நடிப்பது என மிகவும் பிஸியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் திரைத்துறையிலும் கால் பதித்திருக்கிறார். 

image

தோனி என்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பதாக, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தோனியின் மனைவியுமான சாக்ஷி தோனி கூறியிருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தென்னிந்தியாவில் தோனி என்டெர்டெயின்மெண்ட் சார்பில் நயன்தாராவை வைத்து தமிழ் படம் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியானநிலையில், இதுகுறித்து மறுப்பு தெரிவித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. இதன்பிறகு நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் கசிந்தது. நடிகர் விஜய்யை வைத்து தமிழிலும், மகேஷ் பாபு வைத்து தெலுங்கிலும், பிரித்விராஜை வைத்து மலையாளத்திலும், கிச்சா சுதீப்பை வைத்து கன்னடத்திலும் படம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிக்க, அந்தப் படத்தை தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டநிலையில், தற்போது இந்த நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் தலைப்பு, நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. இத்துடன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

image

அதன்படி, தோனி தயாரிக்கும் முதல் படம், தமிழில் உருவாகும் 'Let’s get married'. இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கும் இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. தமிழரான ரமேஷ் தமிழ்மணி எழுதிய ‘அதர்வா: தி ஆர்ஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் சூப்பர் ஹீரோவாகவும், போர் வீரர்களின் தலைவராகவும் தோனி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது விரைவில் வெளியாக உள்ளது.

image

Let’s get married படத்துக்கு விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளார். ப்ரதீப் இ.ராகவ், படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார். இவர் லவ் டுடே, கோமாளி ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவராவார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்