Published : 08,Feb 2017 06:52 AM
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 131 உறுப்பினர்கள்: செங்கோட்டையன் தகவல்

அதிமுக தலைமை அலுவலத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் 131 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளதாக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை மீது சராமாரியான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வைத்துள்ள நிலையில், அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடஇந்த இந்த கூட்டத்தில், கட்சியைச் சேர்ந்த 131 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.