"எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள், இவர்களுக்கு துணைபோகமாட்டார்கள்" - திருமாவளவன்

"எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள், இவர்களுக்கு துணைபோகமாட்டார்கள்" - திருமாவளவன்
"எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள், இவர்களுக்கு துணைபோகமாட்டார்கள்" - திருமாவளவன்

“அதிமுக பாமகவை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற பார்க்கிறது” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

சென்னை போரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களின் தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு, மூன்று மாநில நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சனாதன சக்திகள் இந்த மண்ணில் வேரூன்ற பல வகைகளில் முயற்சி செய்கிறது. அதிமுக-வையும், பாமக-வையும் பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜகவின முயற்சியை தடுப்போம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசனை நன்றியுடன் பாராட்டுகிறோம்.

இது இடைத் தேர்தலுக்கான ஆதரவு என்பதை விட சனாதன சக்திகளை விரட்டி அடிப்பதற்கு கை கோர்க்கக் கூடிய செயல் திட்டத்திற்கான முன்னெடுப்பு. ஒட்டுமொத்த அதிமுக அரசியல் கட்சியை பாஜகவின் முயற்சிகளுக்கு இறையாக்கி விடுவார்களோ என்கிற ஒரு சூழல்தான் இன்றைக்கு தெரிகிறது. இதை அதிமுக தொண்டர்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உண்மையான எம்.ஜி.ஆர் தொண்டர்களாகவும் ஜெயலலிதாவை பின்பற்றக் கூடியவர்களாகவும் இருக்கிற அதிமுக தொண்டர்கள் சங்பரிவார்களுக்கு ஒருபோதும் துணை போகமாட்டார்கள். துணை போகவும் கூடாது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்.

எடப்பாடி என்ன முடிவெடுக்கிறார், ஓபிஎஸ் என்ன முடிவெடுக்கிறார் என்பதை விட அதிமுக தொண்டர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டு நலன்களோடு தொடர்புடையது. அதையே விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com