Published : 26,Jan 2023 09:40 PM

அங்கு மொட்டையடித்த பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்குமாம்? - இது என்ன கலாசாரம்?

A-particular-African-tribe-women-shave-their-heads-before-marriage--Know-Why-

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் அந்த இடத்திற்கென்று தனித்துவ பாரம்பரியங்களும், மரபுகளும் கட்டாயம் இருக்கும். மக்களின் சடங்குகள் மற்றும் உபசரிப்புகளே அவர்களின் கலாசாரத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது. அதுபோல ஒரு சுவாரஸ்யமான பாரம்பரியத்தை ஆப்பிரிக்காவிலுள்ள குறிப்பிட்ட ஒரு பழங்குடியினர் பின்பற்றுகின்றனர். திருமணத்திற்கு முன்பு அங்குள்ள பெண்கள் தலையை மொட்டையடித்துக்கொள்கின்றனர். வித்தியாசமாக இருக்கிறதல்லவா? மொட்டையடித்துக் கொள்ளும் பெண்களுக்குத்தான் நல்ல கணவர்கள் கிடைப்பார்கள் என்று அவர்கள் நம்புகிறார்களாம்.

கென்யாவிலுள்ள போரானா பழங்குடினப் பெண்கள்தான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். மேலும், இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பெண்கள் மொட்டைடித்துக் கொண்டாலும், ஆண்கள் நீண்ட, அடர்த்தியான முடியை வைத்திருக்கின்றனர். இதுபோன்ற நீள முடியுடைய ஆண்களைத்தான் பெண்களும் விரும்புகிறார்களாம்.

image

தலைமுடியை நீக்கி, மொட்டையடித்துள்ள பெண்கள், குடும்பத்தையும், வீட்டுவேலைகளையும் பொறுப்பாக பார்த்துக்கொள்கிறார்கள். ஆண்கள் தங்களை பராமரித்து அழகாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆண்கள் தங்கள் தலைமுடிக்கு நெய் அல்லது வெண்ணெய் தடவி முடிக்கு ஊட்டமளித்து, செழிப்பான, அடர்த்தியான நீண்ட கேசத்தை பேணிக்காக்கின்றனர்.

அங்குள்ள இளம்பெண்கள் தலையின் பாதிப்பகுதியை சவரம் செய்து, மீதி முடியை நேர்த்தியாக பின்னி கட்டிக்கொள்கின்றனர். எத்தியோப்பியா மற்றும் சோமாலியா பகுதிகளில் வாழும் இந்த பழங்குடியின மக்கள் பிறரைவிட வழக்கத்திற்கு மாறான பழக்கவழக்கங்களை கொண்டுள்ளனர். போரானா இனத்தைச் சேர்ந்த பெண்கள் போட்டோக்கள் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. போட்டோக்கள் எடுக்கும் பெண்களுக்கு ரத்த பற்றாக்குறை ஏற்படும் என அப்பழங்குடியினத்தவர் நம்புகின்றனர்.

image

மேலும் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், பெண்கள் தங்கள் கணவரை பகிர்ந்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதுதவிர, வீட்டுவேலைகளிலும் பெண்களுக்கு குறிப்பிட்ட அளவே உரிமை உண்டு. குழந்தைப் பருவத்திலிருந்தே பெண்கள் சிறந்த இல்லத்தரசிகளாக திகழவேண்டும் என்றே போதித்து வளர்க்கப்படுகின்றனர். இதனால் திருமணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கை இனிமையானதாக இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.

உலகம் ஆண் - பெண் சமத்துவத்தில் எவ்வளவோ முன்னோக்கி சென்றுவிட்ட இந்த காலத்திலும் இதுபோன்ற பிற்போக்கு தனமான பெண்களை அடிமைப்படுத்தி வைக்கும் பாரம்பரிய பழக்க வழக்கங்களை உலகின் பல பகுதிகளில் பின்பற்றப்படுவது சற்றே வருத்தத்திற்கு உரியதுதான். இந்த பழங்குடியினத்தவர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் பற்றி உங்களுடைய கருத்து என்ன? இதுபோன்ற பிற இனத்தவரை உங்களால் அடையாளப்படுத்த முடியுமா?

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்