Published : 25,Jan 2023 04:54 PM
”தேதிய குறிச்சு வெச்சுக்கோங்க விஜய் ஃபேன்ஸ்” - தளபதி 67 பற்றி லோகேஷ் கொடுத்த அப்டேட்!

வாரிசு, துணிவு என போட்டா போட்டிகள் ஓடிக்கொண்டிருக்கும் அதேவேளையில், இதற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை #Thalapathy67 ஹேஷ்டேக் ட்விட்டரில் நித்தமும் ட்ரெண்டிங்கிலேயே இருந்து வருகிறது.
மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய்யை வைத்தும் அவரது 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இது முழுக்க முழுக்க தன் பாணியிலான ஆக்ஷன் த்ரில்லர் கதையாகவே இருக்கும் என்றும் லோகேஷ் தெரிவித்திருந்தார்.
இதுபோக தளபதி 67 கைதி, விக்ரம் பட கதைகளை அடக்கிய லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற வட்டத்துக்குள்ளான படமாக இருக்கும் என்றும் தகவல்கள் கசிந்திருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் படம் குறித்து அப்டேட் கொடுக்கவில்லை என்றாலும் ரசிகர்களே லோகேஷின் எல்.சி.யூ குறித்து பல கதைகளை எழுதி வருகிறார்கள். கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய மூன்று படங்களில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் எழுதி வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தின் உச்சியிலேயே இருந்து வருகிறது.
இந்த நிலையில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் மைக்கேல் படத்தின் விழா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதில் பங்கேற்றிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிப்ரவரி முதல் வாரத்தில் தளபதி 67 அப்டேட் வரும் என்று கூறியிருக்கிறார்.
Exclusive: #Thalapathy67 Updates on February 1st, 2nd & 3rd pic.twitter.com/eoj3UeEC7s
— Thalapathy67 Fan Page (@Vijay67Off) January 25, 2023
அதன்படி, “இந்த படம் 100% என் படம்தான். ஒரு சின்ன ஹின்ட் மட்டும் கொடுக்குறேன். அதை நியாபக வெச்சிக்கோங்க. பிப்ரவரி 1, 2, 3 அவ்ளோதான்.” என லோகேஷ் கூற கைத்தட்டல்களும் விசில்களும் பறக்கும் விதமாக இருந்த வீடியோ ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு பட்டையக்கிளப்பி வருகிறது.
இதன் மூலம் வருகிற பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தளபதி 67 குறித்த அப்டேட்கள் வரும் என்பதை புரிந்துகொள்ள முடியும். முன்னதாக பிப்ரவரி முதல் வாரத்தில் தளபதி 67-ன் புரொமோ வீடியோ வெளியாகும் என தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜே ஹின்ட் கொடுத்திருப்பது அந்த தகவல்களை உறுதிபடுத்தியிருக்கிறது.
தளபதி 67-ல் மிஷ்கின், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா வந்ததை போல தளபதி 67-ல் சியான் விக்ரம் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இது லோகேஷின் எல்.சி.யூ என்பதால் கமல்ஹாசனும் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ALSO READ:
"பொண்ணுக்காக இல்லனா எதுக்கு சார்..." தோட்டா தெறிக்க வெளியானது மைக்கேல் ட்ரெய்லர்!
ALSO READ: