Published : 25,Jan 2023 12:22 PM

இந்திய பிரதமர், ஜனாதிபதியுடன் எகிப்திய அதிபர் சந்திப்பு! கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள்!

Modi-meeting-with--Egypt-president--Abtel-Fattah-El-SiSi

இன்று பிரதமர் மோடி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்கிறார் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்- சிசி. இதில் ஆறு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படுகின்றன

குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி அவர்கள், இன்று பிரதமர் மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவையும் சந்திக்கிறார். இந்தியா - எகிப்து இடையே விவசாயம், இணையப் பாதுகாப்பு, மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இச்சந்திப்பு நடைபெற இருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று டெல்லி வந்தடைந்த சிசியை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா வந்துள்ள அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி யை அன்போடு வரவேற்கிறோம். எங்களின் குடியரசு தின விழாவிற்கு தலைமை விருந்தினராக நீங்கள் இந்தியாவிற்கு வருகை தந்தது அனைத்து இந்தியர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Warm welcome to India, President Abdel Fattah el-Sisi. Your historic visit to India as Chief Guest for our Republic Day celebrations is a matter of immense happiness for all Indians. Look forward to our discussions tomorrow. @AlsisiOfficial
— Narendra Modi (@narendramodi) January 24, 2023

இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கும் முதல் எகிப்திய ஜனாதிபதி சிசி ஆவார். இந்த பயணத்தின் போது இரு தரப்பிலிருந்தும் குறைந்தது ஆறு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படுகின்றன என்ற தகவலும் வெளியாகி உள்ளது

#WATCH | President of Egypt Abdel Fattah El-Sisi attends wreath-laying ceremony at Rajghat, Delhi

Egyptian President will attend the Republic Day Parade 2023 as the Chief Guest. pic.twitter.com/wci0ptIVGb
— ANI (@ANI) January 25, 2023

இதற்கு முன்னதாக , சிசி கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா-ஆப்பிரிக்கா மன்றத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டில் பங்கேற்கவும், செப்டம்பர் 2016 இல் அரசு முறை பயணமாகவும் இந்தியாவிற்கு வருகை தந்தார். இதற்கிடையில் நாளை நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் எகிப்தில் இருந்து ராணுவக் குழு பங்கேற்கிறது. எகிப்து ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர், “இந்த அழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒன்றிணைப்பை பிரதிபலிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

image

மேலும் “இச்சந்திப்பு எகிப்தின் தலைமை, அரசாங்கம் மற்றும் மக்கள் மீதான இந்தியாவின் பாராட்டு மற்றும் பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் முக்கிய பங்கு வகிக்கும் மிக முக்கியமான வளர்ந்து வரும் இரு நட்பு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஆர்வத்தையும் பிரதிபலிக்கிறது” என்றும் கூறியுள்ளார்

சற்று முன்

எடிட்டர் சாய்ஸ்