Published : 24,Jan 2023 11:34 AM

எதே ஒரு கொத்து திராட்சைக்கு இத்தனை லட்சம் விலையா? அப்படி என்ன ஸ்பெஷல் இதில்?

do-you-know-what-is-world---s-Most-Expensive-Fruit

ஒரு பொருளை பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குவதில் இந்தியர்களே கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் அப்பேர்ப்பட்டவர்களை மலைத்துப் போக வைக்கும் அளவுக்கு ஒரு திராட்சையின் விலை இருந்திருக்கிறது.

ஏனெனில் ஜப்பானின் ரூபி ரோமன் என்ற திராட்சையின் விலை 8 லட்சம் ரூபாயாம். இதனாலேயே உலகின் அதிக விலை கொண்ட திராட்சை என்ற உலக சாதனை பட்டியலிலும் இந்த ரூபி ரோமன் இடம் பிடித்திருக்கிறது.

Ruby Roman: the miracle grape with a brilliant ruby color created through Ishikawa's climate and the passion of the local people. 1 | Report | ISHIKAWA FOODishbook

ஜப்பானின் இந்த ரூபி ரோமன் திராட்சை சாதாரணமான திராட்சை பழத்தை காட்டிலும் நான்கு மடங்கு பெரிதாக இருக்குமாம். இந்த வகை திராட்சைகளின் அறுவடை ஜூலையில் முடிந்து ஜப்பானின் விடுமுறை காலத்தில் ஒச்சுகென் என்ற முறையை கடைப்பிடித்து அதனை பரிசாக கொடுப்பது வாடிக்கையான ஒன்றாம்.

2020ம் ஆண்டு ஒரு கொத்து ரூபி ரோமன் வகை திராட்சை பழங்கள் 12,000 அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் விலை போயிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 9 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்.

ஒரே ஒரு ரூபி ரோமன் திராட்சை பழத்தின் விலையே 30,000 ரூபாய்க்கு ஹியோகோ மாகாணத்தின் அமகாசாகியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது என ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

石川の風土と人々の情熱が生んだルビーの輝き。奇跡のブドウ、ルビーロマン。前編[Bon appétit Ishikawa!/石川県] | 取材レポート | いしかわ百万石食鑑

இந்த வகை ரூபி ரோமன் கிரேப்ஸ் இஷிகிவா மாகாணத்திலேயே பயிரிடப்படுகிறது. அதனை சந்தைகளில் அதிக விலைக்கு விற்கிறார்கள். ஏனெனில் பாராட்டையும், உறவையும் வளர்ப்பதற்காக ஜப்பானியர்கள் இதுபோன்ற திராட்சைகளை பரிசாக கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

ஜப்பான் சூப்பர் மார்க்கெட்களில் பெரும்பாலும் பழங்களை விற்பனை செய்வதில்லை என்பதாலும் இந்த ரூபி ரோமன் கிரேப்ஸ் விலை அதிகளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்