Published : 27,Sep 2017 08:46 AM
ஹெச்.ராஜா மணி விழா: முதல்வர், ஸ்டாலின் நேரில் வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் மணிவிழா, சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.
விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரும் ஹெச்.ராஜாவின் மணிவிழாவுக்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில நாட்கள் முன்பு நேரில் சந்தித்து தனது மணிவிழாவுக்கு ஹெச்.ராஜா அழைப்பிதழ் அளித்திருந்தார். மேலும், மணி விழாவில் திமுக எம்.பி. கனிமொழி, பத்திரிகையாளர் குருமூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்று ஹெச்.ராஜாவை வாழ்த்தினர்.