Published : 23,Jan 2023 01:05 PM

"பொண்ணுக்காக இல்லனா எதுக்கு சார்..." தோட்டா தெறிக்க வெளியானது மைக்கேல் ட்ரெய்லர்!

ranjit-jeyakodis-michael-movie-trailer-is-out-now

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், புரியாத புதிர் போன்ற படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த படமாக உருவாகியிருக்கிறது மைக்கேல். இதில் விஜய சேதுபதி, சந்தீப் கிஷன், கவுதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், திவ்யங்கா கவுசிக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கிரண் கவுசிக் ஒளிப்பதிவில், சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக எதிர்வரும் பிப்ரவரி 3ம் தேதி மைக்கேல் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

தமிழ் பதிப்பின் ட்ரெய்லரை இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகர் ஜெயம் ரவியும் வெளியிட்டிருக்கிறார்கள். ட்ரெய்லர் ரிலீசான சில மணிநேரத்திலேயே ரசிகர்கள் பலரது கவனத்தையும் மைக்கேல் படம் ஈர்த்திருக்கிறது என்பது அதற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்தே தெரிந்துகொள்ளலாம்.

ஏனெனில் 2.14 நிமிடம் இருக்கும் ட்ரெய்லர் முழுக்க படார் படாரென துப்பாக்கி குண்டு சத்தம் காதை கிழிக்க, ரத்தம் தெறிதெறிக்க, ஆக்‌ஷன் காட்சிகளோடு ஈர்க்கும் சில நச் வசனங்களும் கொண்டிருக்கிறது. வயதான வில்லனை போல விஜய் சேதுபதியும், காதலிக்காக போராடும் காதலனாக சந்தீப் கிஷனும், போலீஸ் அதிகாரி போல கவுதம் மேனனும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

அதில், “உங்க எல்லாருக்கும் ஸ்பெஷல் ட்ரீட் காத்திட்டு இருக்கு” , “நெருப்பு ஈர்க்கும். பக்கத்துல போனா மொத்தமா எரிச்சிரும்” , “பொண்ணுக்காக இல்லனா எதுக்கு சார் ஒரு மனுஷன் வாழனும்” போன்ற வசனங்களும், ட்ரெய்லர் எடிட் மற்றும் சாம் சி.எஸின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கிறது. இதனையடுத்து ட்விட்டரில் #MichaelTrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்