Published : 22,Jan 2023 12:00 PM
”திரைல பாத்தது தரைல நடக்குது” - 2 டிஜிட் எண்ணுக்காக மெனக்கெடும் இளைஞர்; ட்வீட்டின் பின்னணி

விஜய்யின் சச்சின் படத்தில் வடிவேலுவிடம் விஜய் ஒரு ஃபோன் நம்பரை கொடுப்பார். ஆனால் அதில் 10 டிஜிட்டிற்கு பதில் 9 இலக்க எண்ணே இருக்கும். “என்னப்பா 9 நம்பர்தான் இருக்குனு” என வடிவேலு கேட்க, “0-ல இருந்து 9 வரை நம்பர மாத்தி மாத்தி போட்டு ட்ரை பண்ணுனு” விஜய் சொல்வார்.
இதே போல பல திரைப்படங்களில் விரட்டி விரட்டி காதலிக்க முற்படும் ஹீரோவிடம் நாயகி பாதி ஃபோன் நம்பரை மட்டும் கொடுப்பார். மீதி நம்பரை கண்டுபிடிக்க நம்பரை மாற்றி மாற்றி போட்டு ஹீரோவும் முயற்சிப்பார். இதெல்லாம் படங்களில்தான் சாத்தியமாக இருக்கும் யாராவது நிஜத்தில் இப்படியெல்லாம் செய்தால் மெனக்கெட்டு நம்பரை மாற்றி போட்டு முயற்சிப்பார்களா என்ற கேள்வி பொதுவாக எழும்.
ஆனால் திரையில் பார்த்ததெல்லம் தரையிலும் நடக்கும் என வடிவேலு சொல்வது போல உண்மையிலேயே இப்படியான சம்பவம் நடந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அது குறித்த ட்விட்டர் பதிவுதான் தற்போது வைரலாகி வருகிறது.
My 22 year old cousin met his dream girl at a bar and it's going pretty well pic.twitter.com/ZrHB8rYuoV
— Henpecked Hal (@HenpeckedHal) January 17, 2023
அதன்படி Henpecked Hal என்ற ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய 22 வயசுடைய கஸின் அவனுடைய ட்ரீம் கேர்ளை பாரில் பார்த்திருக்கிறார்” என கேப்ஷனிட்டு அந்த நபருடனான எஸ்.எம்.எஸ் உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்திருக்கிறார். அதில், “என்னுடைய காதலியை நேற்றிரவு பார்த்தேன்” என 22 வயது இளைஞர் சொல்ல அதற்கு, “ஃபோன் நம்பர் கிடைத்ததா?” எனக் கேட்க, “கூடுமானவரை கிடைத்திருக்கிறது” என பதில் வர, “அது எப்படி கூடுமானவரை?” என கேட்க, 10 டிஜிட் நம்பருக்கு பதில் 8 டிஜிட் நம்பரை மட்டுமே கொடுத்துவிட்டுச் சென்ற அந்த பெண்ணின் ஃபோன் நம்பரை பகிர்ந்திருக்கிறார்.
இதனையடுத்து 512 3*1 2*04 என்ற எண்ணில் விடுபட்ட அந்த 2 இலக்கத்திற்கு மட்டும் 0-ல் இருந்து 9 வரை மாற்றி மாற்றி நம்பரை போட்டு அந்த பெண்ணை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக குறிப்பிட்டு ஃபோட்டோவும் அந்த ட்விட்டர் பதிவில் பகிரப்பட்டிருக்கிறது.
The effort though. That’s all we want
— Lou (@VarleyLou) January 18, 2023
There are databases of available numbers out there, anything available that fits the pattern won't be the number.
— Liam T.A. Ford (@ltaford) January 18, 2023
இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், “என்ன அப்டேட்? நம்பரை கண்டுபிடிக்க முடிந்ததா?” என்று ஈடுபாட்டோடு கேட்டு வருகிறார்கள். இதுபோக, “ஃபோன் நம்பரை கண்டுபிடிக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டே தேவைப்படும் போலவே” என்றும், “Poll போட வேண்டி வரும் போல” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
Henpecked Hal-ன் இந்த ட்விட்டர் பதிவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்ததோடு 12 ஆயிரத்துக்கும் மேலானோர் ரீட்வீட் செய்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Great thought!
— Henpecked Hal (@HenpeckedHal) January 17, 2023
Absolutely!
— Henpecked Hal (@HenpeckedHal) January 17, 2023
Working on it!
— Henpecked Hal (@HenpeckedHal) January 17, 2023