Published : 20,Jan 2023 01:07 PM
நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதிய வேன்... திருப்பதி தரிசனத்தை முடித்து திரும்பியபோது சோகம்

கடப்பா மாவட்டத்தில் உள்ள பொத்தட்டூர் அருகே சாலை ஓரததில் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் காசிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் டெம்போ ட்ராவலர் வேனில் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்த பின் ஊர் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் பயணித்த வேன் பொதட்டூர் அருகே சென்று கொண்டிருந்தது, சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் பயணித்த அனுஷா, கோகுலம்மா, ராமலட்சுமி ஆகிய மூன்று பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற பொத்தட்டூர் போலீசார், படுகாயமடைந்து எட்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொதட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.