Published : 19,Jan 2023 06:53 PM
ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த நடிகை தமன்னா - அப்படின்னா ஐஸ்வர்யா ராய் இல்லையா?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடிகை தமன்னா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’ திரைப்படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் தனது 4-வது படமாக இயக்கி வருகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தாண்டு வெளியாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துவரும் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ அடங்கிய சிறப்பு ப்ரோமோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.
மேலும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் இணைந்துள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் ரஜினியுடன். தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தநிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
.@tamannaahspeaks from the sets of #Jailer
— Sun Pictures (@sunpictures) January 19, 2023
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/sKxGbQcfXL
முன்னதாக, ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஒரு தகவல் கசிந்து இருந்தது. ஆனால், தற்போது தமன்னா உறுதி செய்யப்பட்டுள்ளார். தமன்னாவுக்கும், டார்லிங்ஸ் படத்தில் ஆலியாபட்டிற்கு கணவராக நடித்தவருக்கும் இடையே காதல் இருந்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது ரஜினி காந்த் படத்தில் தமன்னா ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதேபோல், மலையாளத்தில் திலீப் உடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். மலையாளத்தில் தம்மன்னாவுக்கு அறிமுக படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ரஜினிக்கு மகளாக நடிக்க பிரியங்கா மோகன் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.