Published : 12,Jan 2023 08:28 PM

தொடர் கொலைகளை நிகழ்த்திய இன்னொரு சோப்ராஜ்... 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய ஜான் கெட்ரூ!

Man-Pleads-Guilty-to-1973-Murder-of-a-Stanford-Law-Librarian

அமெரிக்காவில், இளம்பெண் கொலை வழக்கில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கொலையாளி சிக்கியுள்ளார்.

ஸ்டான்ஃபோர்டு பல்கலையில் இளம்பெண் கொலை!

1973ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர், லெஸ்லி பெர்லோ. அப்போது 21 வயது நிரம்பிய இந்த இளம்பெண், அதே ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை, அந்தப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, கலிஃபோர்னியா இளம்பெண்களிடம் அச்சத்தைத் தூண்டியது. தவிர, இந்தக் கொலைக்கு எதிராகவும் அவர்களைப் போராடத் தூண்டியது. ஆனால், பல ஆண்டுகளாகியும் காவல் துறைக்கு இந்த கொலையில் துப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பெர்லோ கொலை வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்துக்கு அருகில் வசித்து வந்த ஜான் கெட்ரூ என்ற நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. தற்போது 78 வயதாகும் ஜான் கெட்ரூ, அப்பல்கலைக்கழகத்தின் கால்பந்து பயிற்சியாளரும் தடகள இயக்குநருமாக இருந்த 21 வயது இளம்பெண் ஜேனட் ஆன் டெய்லரையும் இதேபோல் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார். அந்த கொலை வழக்கில் சிக்கியபோதுதான் ஜான் கெட்ரூ, லெஸ்லி பெர்லோவையும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

image

கொலை நிகழ்ந்தது எப்படி?

”1973ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி, பெர்லோ தன் தாயின் பிறந்த நாளுக்கு பரிசளிப்பதற்காக, இயற்கையைப் படம்பிடிக்க காடுகளுக்குள் சென்றபோதுதான் இந்த கொடூரம் நேர்ந்துள்ளது. டெய்லர் கொலை குறித்து சக அதிகாரிகளுடன், லெஸ்லி பெர்லோ விசாரணை அதிகாரிகள் பேசிக் கொண்டிருந்தபோதுதான், பெர்லோவின் கொலையோடு அந்த விஷயங்கள் சார்ந்துபோனதைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

image

கெட்ரூவின் விரல் நகங்கள் மூலம் எடுக்கப்பட்ட டி.என்.ஏ. டெஸ்டே இந்த கொலைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கியது. இக்குற்றங்கள் மட்டுமன்றி கெட்ரூ ஏற்கெனவே 1964ஆம் ஆண்டு ஜெர்மனியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார். அந்த வழக்கில் அவர் மைனர் என்பதால் சிறு தண்டனை பெற்ற பிறகு அமெரிக்காவிற்கு திரும்பியுள்ளார்” என்று வழக்கறிஞர் மைக்கேல் அமரல் தெரிவித்துள்ளார்.

மேலும், “டிஎன்ஏ பரிசோதனைக்கான தொழில் நுட்பம் அப்போதைக்கு முன்னேற்றம் அடையாததால், குற்றவாளி கெட்ரூ பல ஆண்டுகளாக காவல் துறைக்கே சவால் விடும் வகையில் ஏமாற்றி வந்துள்ளான்” என வழக்கறிஞர் மைக்கேல் அமரல் தெரிவித்துள்ளார். டெய்லரின் வழக்கில் ஏற்கெனவே கெட்ரூவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

image

முதல் பெண் அதிபராக வர ஆசை!

இந்த நிலையில், பெர்லோவைக் கொன்றதற்காக மேலும், ஓர் ஆயுள் தண்டனை தற்போது அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை சாண்டா கிளாரா கவுண்டி உயர்நீதிமன்றத்தில், நேற்று முன் தினம் (ஜனவரி 10ஆம் தேதி) வழங்கப்பட்டுள்ளது. கெட்ரூ நடத்திய கொலைகள், ’ஸ்டான்ஃபோர்டு கொலைகள்’ எனச் சொல்லப்படுகிறது.

இந்த தண்டனைக்குப் பிறகு பேட்டியளித்த பெர்லோவின் சகோதரியான டயான் பெர்லோவ், “என் மூத்த சகோதரி என்னைவிட்டுப் பிரிந்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகின்றன. அவள் மிகவும் புத்திசாலி. அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக வரவேண்டும் என்பதே அவரது வாழ்நாள் குறிக்கோளாக இருந்தது. ஆனால் இன்று, அவள் குரலற்றவளாகவும் கண்ணுக்குத் தெரியாதவளாகவும் இருக்கிறாள். இதை நான் விரும்பவில்லை.

ஆனால் இந்த 50 வருடங்களில் என் சகோதரியைச் சீரழித்துக் கொன்ற அசுரன் சுதந்திரமாக நடமாடுகிறான்” என கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். டயான் பெர்லோவ்வுக்கு அவரது சகோதரி பெர்லோதான் வழிகாட்டியாக இருந்துள்ளார். இதையடுத்தே, அவரது கொலையைக் கண்டுபிடிக்க, டயான் பெர்லோவ் போலீசாருடன் இணைந்து 45 ஆண்டுகள் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன்முடிவே இன்று கெட்ரூவுக்கு கிடைத்துள்ள தண்டனை என்கின்றனர் காவல்துறையினர்.

பிகினி கொலையாளி சோப்ராஜ்!

image

உலகையே ஆட்டிப்படைத்த பிகினி கில்லரான சோப்ராஜைப் போன்று, கெட்ரூவும் பெரிய கில்லராய் இருந்திருக்கிறான். சோப்ராஜுவால் கொலை செய்யப்பட்ட பல பெண்கள் பிகினி உடையில் கண்டெடுக்கப்பட்டதால் சோப்ராஜ் 'பிகினி கொலையாளி’ என அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்