Published : 09,Jan 2023 03:36 PM

குணமடைந்தபோதும் ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு ரெஸ்ட் கொடுத்தது பிசிசிஐ - காரணம் இதுதான்!

Bumrah-recovered-from-injury----Why-was-he-dropped-from-the-Sri-Lanka-series-

காயத்தில் இருந்து குணமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்தபோது, முதுகு வலி காரணமாக அந்தத் தொடரில் இருந்து விலகினார். முதுகுவலியின் தீவிரத் தன்மையை அறிந்துகொள்ள பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார் பும்ரா. முதுகு வலி பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை என்ற போதிலும் அதில் இருந்து குணமடைய நீண்ட காலம் ஆகும் எனக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, டி20 தொடர் நிறைவுற்ற நிலையில், அடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 10ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்க இருக்கிறது. இதையடுத்து, இந்த ஒருநாள் போட்டிக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றிருந்தார். ஆனால், தற்போது அந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

image

நல்ல உடற்தகுதியுடன் அவர் இருந்தாலும், தற்போதைக்கு இந்த தொடரில் அவரை களமிறக்க வேண்டாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கவாஸ்கர் பார்டர் டிராஃபி டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும், அதனால்தான் அவருக்கு இன்னும் ஓய்வை அளித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அவர் மீண்டும் அணியில் விரைவில் இடம் பெறுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பும்ராவுக்குப் பதில்தான் அர்ஷ்தீப் சிங், முகம்மது சிராஜ், முகம்மது ஷமி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் முதல் தென் ஆப்பிரிக்காவுக்கான டி20 தொடர், டி20 உலகக்கோப்பை, இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் விளையாடக்கூடிய இந்திய அணி வீரர்களின் விவரம் வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்கான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்