Published : 09,Jan 2023 04:14 PM

பிரேசிலில் முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தினுள் நுழைந்து சூறை

Pro-Bolsonaro-rioters-storm-Brazil-s-top-government-offices

பிரேசிலில் முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் உச்சநீதிமன்றத்தினுள் நுழைந்து சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிரேசில் அதிபர் தேர்தலில் வலதுசாரியான ஜெயிர் போல்சனாரோவை தோற்கடித்து லுலா டி சில்வா வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரேசிலியா நகரில் திரண்ட போல்சனாரோவின் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற கட்டடம், உச்சநீதிமன்றம் மற்றும் அதிபர் மாளிகையினுள் நுழைந்து ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்தனர்.

அதிபர் மாளிகை மீது ஏறி, பதாகைகளை வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் தலைநகரமே போர்க்களம் போல காட்சி அளித்தது. வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றிருந்த அதிபர் லுலா டி சில்வா, வன்முறைகளை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு அதிகாரமளித்து உத்தரவிட்டார். இதனை அடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி போல்சனாரோ ஆதரவாளர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர்.

image

இதனிடையே போல்சனாரோ, தனது ஆதரவாளர்களின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இவற்றை, தான் தூண்டிவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்