Published : 09,Jan 2023 12:28 PM

பாரதியாராக கமல்ஹாசன்... கோவையில் மநீம கட்சியின் `தமிழ்நாடு வாழ்க’ போஸ்டரால் பரபரப்பு!

MNM-party-s-poster-on-Tamilnadu-and-Tamilagam-issue

கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழ்நாடு வாழ்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, `தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே சிறப்பானதாக இருக்கும்' என்று பேசியிருந்தார். இதற்கு பல தரப்பனரிடையே விமர்சனங்களும் எதிர்ப்பும் கிளம்பியது.

image

இந்நிலையில், ஆளுநரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாஜகவினர், `ஆளுநர் பேசியதை அரசியலாக்க வேண்டாம்' என கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளங்களிலும் `தமிழகம் - தமிழ்நாடு' குறித்து அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

image

இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கோவை மத்திய மாவட்டம் சார்பில் தமிழ்நாடு வாழ்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாரதியார் போல் வேடமணிந்த புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யத்தினர் ஒட்டியுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்