Published : 08,Jan 2023 02:03 PM
நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள் - மதுரையில் பரபர போஸ்டர்

நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக தலைமைச் செயலகம், நாடாளுமன்ற கட்டிடங்கள் இடம்பெற்ற போஸ்டர்கள் மதுரையில் ஒட்டப்பட்டு கவனம் பெற்றுள்ளது.
அஜித்குமார் நடிப்பில் ஜன.,11 ஆம் தேதி வெளியாக உள்ள துணிவு படத்திற்கு அவரது ரசிகர்கள் நீண்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதே வேளையில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் அன்றைய தினமே வெளியாக உள்ளது. குறிப்பாக சமீப நாட்களாக நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே போஸ்டர் யுத்தம் நடைபெற்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் விதமான போஸ்டர்களை மதுரையில் உள்ள பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் ஒட்டி உள்ளனர்.
இந்த போஸ்டரில் இன்று பேரன்புமிகு AK..! என்று மாண்புமிகு..க்கு OK..? என வாசகங்களுடன் தலைமைச் செயலகம், பாராளுமன்ற கட்டிடங்களும் இடம்பெற்று நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.