Published : 07,Jan 2023 02:42 PM

முழங்கால் அறுவைச் சிசிச்சை வெற்றி: விரைவாக குணமாகிறார் ரிஷப் பண்ட்!

Rishabh-Pant--who-was-involved-in-an-accident--underwent-a-successful-surgery-in-Mumbai-

விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட்டுக்கு, மும்பை மருத்துவமனையில் நடைபெற்ற அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி அருகே விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிச் சென்ற கார், சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட்டை, அந்த வழியாகச் சென்ற பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் காப்பாற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மேல்சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார்.

image

முழங்கால் மற்றும் கணுக்கால் தசைநார் சிகிச்சைக்காக கடந்த ஜனவரி 4ஆம் தேதி ரிஷப் பண்ட், தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் பிசிசிஐ மருத்துவக்குழுவும் பயணித்தது. மும்பையில் அவருக்கு புகழ்பெற்ற எலும்பியல் மருத்துவரான டின்ஷா பர்திவாலாவின் மேற்பார்வையில் அறுவைச்சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று (ஜனவரி 6) ரிஷப்புக்கு முழங்கால் மற்றும் கணுக்கால் தசைநார் பகுதிகளில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 3-4 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், ரிஷப் தற்போது நன்றாக உள்ளார் எனவும் மருத்துவமனை வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவர் முழுவதும் குணமடைய சில மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்