Published : 06,Jan 2023 01:14 PM

OTT-ல் வெளியாகிறது Black Panther: Wakanda Forever - எப்போது தெரியுமா?

Here-s-Where-To-Watch--Black-Panther---Wakanda-Forever--on-OTT

மார்வெல் ஸ்டுடியோஸின் Black Panther: Wakanda Forever படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸின் முக்கியமான படங்களில் ஒன்று Black Panther. 2018ல் வெளியான போதே படத்தின் ஒவ்வொரு காட்சியின் மார்வெல் ரசிகர்களின் ஆவலுக்கு சரியான தீனியையே போட்டிருந்தது. இதனையடுத்து கடந்த நவம்பர் 11ம் தேதி black panther-ன் சீக்வல் படமான wakanda forever வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில், திரையில் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் கழித்து ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கிறது வகாண்டா ஃபார் எவர் படம். அதன்படி வருகிற பிப்ரவரி 1ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் Black panther: wakanda forever ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ரசிகர்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் புத்தாண்டில் ஒலித்தது, பிப்ரவரி 1 அன்று மார்வெல் ஸ்டுடியோஸின் "பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர்" ஸ்ட்ரீமிங் அறிமுகத்தை அறிவித்தது. படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும். முக்கிய கலை இப்போது பதிவிறக்கம் செய்து பகிர கிடைக்கிறது.

Black Panther: Wakanda Forever கதையம்சம் என்ன?

பிளாக் பாந்தர் படத்தில் Chadwick Boseman நடித்திருந்த மன்னர் T'Challa கதாப்பாத்திரத்தின் இறப்புக்கு பிறகு வகாண்டாவில் உள்ள வைப்ரேனியத்தை திருட முயலும் உலக நாடுகளை தடுக்க டி’சால்லாவின் தாயார் ராணியாக பொறுப்பேற்கிறார். அதே வேளையில் கடலுக்கடியில் கிடக்கும் வைப்ரேனியத்தை எடுக்க போனார்களை கடலுக்குள் வாழ்பவர்கள் தாக்க, தங்களை காக்குமாறு அந்த கடல் தேசத்து ஆட்சியாளரான நமோர் வகாண்டாவிடம் கேட்கிறார்.

ஆனால் நமோருடன் இணைய மறுக்கும் வகாண்டா, தங்கள் தேசத்தை காக்க பிளாக் பாந்தரால்தான் முடியும் என்பதால் டி’சால்லாவுக்கு பதில் யார் புதிய பிளாக் பாந்தராக வருகிறார்? வகாண்டா காப்பாற்றப்பட்டதா இல்லையா என்பதே எஞ்சிய கதையாக இருக்கும். த்ரில்லிங்கான காட்சிகள் நிறைந்த இந்த வகாண்டா ஃபார் எவர் படத்தை கெவின் ஃபைஜ் மற்றும் நேட் மூர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ரியான் கூக்லர் இயக்கப்பட்டிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்