
இன்று பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரிக்கப்படுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலமாக இருந்தபோது, அங்கு 1932ஆம் ஆண்டில் பிறந்தவர் மன்மோகன் சிங். சிறந்த பொருளாதார மேதையான அவர், 10 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராகவும் இருந்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிறந்த நாள் காணும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், சிறந்த ஆரோக்கியத்துடன் அவர் நீண்ட நாள் வாழ பிராத்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளுக்கு ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். #ManmohanSingh என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் இன்று காலை முதலே ட்ரெண்டாகி வருகிறது.