Published : 08,Feb 2017 01:52 AM

சென்னையில் காலை 10 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

ADMK-MLAs-meet

சென்னையில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சமாதியில் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்டாயத்தால் பதவி விலக நேர்ந்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பியான தம்பிதுரை, அதிமுகவின் 134 எம்பிக்களும் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்