Published : 05,Jan 2023 11:54 AM
இன்னுமா வழி கண்டுபிடிக்கல! மெட்டா நிறுவனத்துக்கு சுமார் ரூ3000 கோடி அபராதம்! ஏன் தெரியுமா?

ஐக்கிய நாடுகளை சேர்ந்த ஒழுங்குமுறையாளர்களால் Giphy-ஐ விற்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், தனிப்பட்ட முறையில் விளம்பரங்களை பயனர்களுக்கு காணிபித்ததற்காக சுமார் 414 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ. 3,424 கோடி) இழந்துள்ளார்.
தனிஉரிமையை மீறியதாக கூறி ஐரிஷ் ஒழுங்குமுறையாளர்களால் மெட்டா நிறுவனத்துக்கு இந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மெடாவின் ஃபேஸ்புக், இன்ஸ்டாவின் ஐரோப்பிய பயனர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப விளம்பரங்களை இந்நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி காட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெட்டாவின் வணிகமானது பயனர்களின் ஆன்லைன் செயல்பாட்டின் அடிப்படையில் அவர்களைக் குறிவைக்கும் விளம்பரங்களை (Personalised Ads) அனுப்பவதையே பெரிதும் நம்பியுள்ளது என்பதால், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டாயங்கள் காரணமாக மெட்டாவின் வருவாய்க்கு பெரும் இழப்பு ஏற்படுமென கணிக்கப்படுகிறது. மெட்டா ஏற்கனவே வீழ்ச்சியடைந்த விளம்பர வருவாய்களால் இழப்பில் உள்ளது. அப்படியிருக்க இன்னும் வருவாயில் வீழ்ச்சியடைந்தால், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற நிலையை உருவாக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் இத்தடை மற்றும் அபராத முடிவுகள் மீது மெட்டா நிறுவனம் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எதிர்த்து முறையிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனியுரிமையை மீறியதற்காக மெட்டா நிறுவனத்திற்கு இதுவரை பலமுறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதால், இது அவர்களுக்கு புதிய அணுகுமுறையாக இருக்கப்போவதில்லை. 2021-ல் இருந்து மட்டும், 900 மில்லியன் யூரோக்களுக்கும் மேல் அபராதம் பெற்றிருக்கிறது மெட்டா என்பது குறிப்பிடத்தக்கது.