”நீ எந்த சேனல்.. உன் பெயர் என்ன?” - பத்திரிகையாளர்களுடன் அண்ணாமலை உச்சகட்ட வாக்குவாதம்!

”நீ எந்த சேனல்.. உன் பெயர் என்ன?” - பத்திரிகையாளர்களுடன் அண்ணாமலை உச்சகட்ட வாக்குவாதம்!
”நீ எந்த சேனல்.. உன் பெயர் என்ன?” - பத்திரிகையாளர்களுடன் அண்ணாமலை உச்சகட்ட வாக்குவாதம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “என்மீது குற்றச்சாட்டு வைக்கப்படுவது நல்லதுதான், அப்போதுதான் அது பேசுபொருளாகும். கட்சியிலிருந்து விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவது என் வாடிக்கை” என்றார்.

தொடர்ந்து கேள்விகளை முன்வைத்த செய்தியாளர்களிடம், தாங்கள் எந்த சேனல் என மிரட்டும் வகையில் கேட்டு ஒவ்வொருவரிடமும் அண்ணாமலை கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அண்ணாமலை அளித்த பதில்கள் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிகழ்ந்த வாக்குவாதம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com