Published : 04,Jan 2023 03:25 PM

”சூர்யாவால் வியந்துப்போன படக்குழு” - 3Dல் உருவாகும் S42-ன் முக்கிய அப்டேட் வெளியானது..!

Team-surya-42-is-amazed-at-surya-s-hardwork-for-the-film-

சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய காலடியை பதித்தவர் இயக்குநர் சிவா. அந்த படத்தின் பெயராலேயே சிறுத்தை சிவா என்று அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் உடன் இணைந்து வரிசையாக வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களை இயக்கி இருந்தார் சிறுத்தை சிவா. அஜித் குமாரை தொடர்ந்து உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த இயக்கினார். அந்த வரிசையில் தற்போது சூர்யா உடன் இணைந்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் சிவாவின் கனவு படமாக மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம்தான் சூர்யா 42. 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் மிக பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் தலைப்பினை வெளியிடப்படாத நிலையில் இதுவரை சூர்யா 42 என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன் விஸ்வாசம், அண்ணாத்த போன்ற குடும்ப பாங்கான திரைப்படங்களைத் தந்த சிறுத்தை சிவா இப்பொழுது நடிகர் சூர்யாவுடன் முதல் முறை இணைந்து தன்னுடைய கனவு படத்தினை உருவாக்கி வருகிறார்.

Suriya 42 motion poster: Forget pan-India, actor goes pan-world with Siva's period spectacle | Entertainment News,The Indian Express

இப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் சென்னை மற்றும் கோவாவில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் சென்னை எண்ணூரில் ஷூட்டி டிசம்பரில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில் சூர்யா 42 பற்றி சிறுத்தை சிவா பேசிய போது “இந்த படத்தின் கதை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்துவிட்டது. அப்போதிருந்த வியாபார சூழலை நினைத்து படத்தை எடுக்க முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது கே.ஜி.ஃப், பாகுபலி போன்ற படங்கள் நம்பிக்கையை கொடுத்திருக்கின்றன. ஆகையால் பட வேளைகளை கையில் எடுத்திருக்கிறோம்.” என்று தெரிவித்திருக்கிறார்.

சரித்திர கதையை களமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகையான திஷா படானி ஹீரோயினாகவும், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சூர்யா 42 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதில் குறிப்பிடத்தகுந்த தகவல் என்னவென்றால், 'பாகுபலி' படத்தில் பணியாற்றி கிராஃபிக் குழுவே சூர்யா 42-ல் இணைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

Massive Update on Surya 42 Poster is Here

படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னரே, படத்தின் 3டி தொழில்நுட்ப குழுவினர், அந்த லொக்கேஷனுக்கு சென்று ஆராய்ந்திருக்கிறார்கள். அதன்பின், கலைத் துறையுடன் இணைந்து அரங்கம் எப்படி அமைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்படியான ஹோம்வொர்க், ப்ரீ வொர்க் எல்லாம் செய்திருப்பதால் படப்பிடிப்ப மிகவும் நேர்த்தியாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இவ்வளவு பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று EVP ஃபிலிம் சிட்டியில் ஆரம்பித்துள்ளது.

இதுவரையில் சமகால நிகழ்வுகள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து முடிந்து உள்ள நிலையில் இதன் பிறகுதான் வரலாற்று கதைக்கான காட்சிகள் எடுக்கப்பட இருப்பதாகவும், பொங்கல் பண்டிகை வரை படப்பிடிப்பு நடத்திவிட்டு, பொங்கல் விடுமுறைக்கு பின் அடுத்தடுத்து ஷூட்டிங் நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளில் சூர்யாவின் நடிப்பு மொத்த படக்குழுவையும் வியக்க வைத்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

- சுஹைல் பாஷா

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்